ஆழ்மனதிலே
!!!
ஏன் இந்த வலைப்பூ?
ஏன் இந்த வலைப்பூ?
மனிதவாழ்வு மர்மங்கள் நிறைந்தது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவனது நிறைவேறாத ஆசைகள் , துயரங்கள் , கனவுகள் , ஏமாற்றம் மற்றும் ஏக்கங்கள் போன்றவைகள் மறைந்திருக்கும். சிலர் , அவற்றை யாரிடமும் பகிர்ந்துகொள்வதில்லை. அதனாலே சிலர் மன அழுத்தத்திற்கு உள்ளாகி செயலிழந்து மனநோயாளி ஆகிவிடுகின்றனர். அதேபோல் வேறு சிலர் மிகவும் வெளிப்படையாக நடந்து கொள்வதுண்டு . அதனால் மற்றவர்களும் பாதிக்கப் படுவதுமுண்டு. அதேபோல் பலர் சுய நலமிகளாகவும் ,கர்வம் பிடித்தவர்களாகவும் ,கோழைகளாகவும், பணவெறி கொண்டவர்களாகவும் சமுக அக்கறையின்றி வாழ்கிறார்கள். இப்படி பல்வேறு தளத்திலே பயணிக்கும் மனிதர்களைக் கொண்டதே இந்தச்சமுகம். இதில் எனது பட்டறிவை உங்களிடம் பகிர்ந்து கொள்வதே என் நோக்கம்.
-----சு.கருப்பையா
No comments:
Post a Comment