Thursday, 30 April 2015
வாழ்வியலில் திருக்குறள்- அத்தியாயம்-5
ஓர்ந்துகண்
ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
செங்கோன்மை,
குறள் 541:
குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும்
சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.
கலைஞர்
உரை:
யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம்
செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே
நீதிமுறையாகும்.
மு.வ
உரை:
மாவீரன் ஷெர்ஷா சூரி
(காலம் : 1486
முதல் - 22-05-1545 வரை ). முகலாயப்பேரரசர் ஹுமாயினைத் தோற்கடித்து
கி.பி.1540 முதல் கி.பி.1545 ஆண்டுவரை ஐந்தாண்டுகள் மட்டுமே டில்லியை ஆட்சி
புரிந்தவர். நீதி மற்றும்
வரி வசூலில் பல சீர்திருத்தங்கள் செய்தவர். இந்தியாவில் , பஞ்சாப்-வங்காளம்; ஆக்ரா-சித்தூர்; லாகூர்-மூல்தான்
போன்ற நகரங்களை இணைக்கும் சாலைகள் அமைத்தவரும் அவரே. குடி மக்களிடையே எந்த பாரபட்சமும் கூடாது
என்பதில் ஷெர்ஷா மிகக் கறாராக இருந்தார்.
அவனது நேர்மைக்கும் , நீதிவழங்கும்
ஆற்றலுக்கும் அடையாளமாக அமைந்த ஒரு நிகழ்வை பேராசிரியர் அருணன் , தமது
காலந்தோறும் பிராமணியம் பாகம் II&III இல் குறிப்பிடுகிறார். ஷெர்ஷாவின் மூத்த மகன் அதல்கான் . இவன்,
ஒருநாள் யானை மீதேறி ஆக்ரா வீதிகளில்
போய்க் கொண்டிருந்தான் . தெருவின் ஓரத்தில் ஒரு கடைக்காரர் வீடு வந்தது. இடிந்த
வீடு;
மறைப்புகள் இல்லை. அதனுள்ளே கடைக்காரர் மனைவி ஆடைகளின்றி
குளித்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்துவிட்ட அதல்கான் அவள் அழகில் மயங்கி
சிறிது நேரம் பார்த்து விட்டு மோகத்தில்
ஒரு பீடாவை அவள் மீது எரிந்து விட்டுப் போய்விடுகிறான். அவமானத்தில் குறுகிப் போன அப்பெண் , தனது
கணவன் வந்ததும் நடந்ததைக் கூறி தனக்கு மானபங்கம் ஏற்பட்டு விட்டதாகவும் , தான்
சாகப்போவதாகவும் அழ ஆரம்பிக்கிறாள். அவன் நேரே
ஷெர்ஷாவிடம் போய் அவரது மகனை பற்றிப் புகார் செய்தான்.
ஷெர்ஷா, இஸ்லாமியச்
சட்ட விதிகளின்படி தனது மகனுக்கு தண்டனை தர முடிவெடுத்தார். வேறென்ன ! பதிலுக்குப் பதில் தான். அதாவது தனது மகன் அதல்கானின் மனைவி ஆடையின்றி
குளிக்க ,
யானை மீதிலிருந்து அவளைப் பார்த்து கடைக்காரர் பீடா வீச
வேண்டும். இதுவே தீர்ப்பு! ஆடிப் போய்விட்டது அரசவை. மந்திரி
பிரதானிகள் ,
பிரபுக்கள் ஷெர்ஷாவிடம் எவ்வளவோ
சொல்லிப் பார்த்தார்கள். அசையவில்லை ஷெர்ஷா. அவரின் நேர்மையான தீர்ப்பினைக் கண்டு அசந்து போன
கடைக்காரரே தனது புகாரை திரும்ப பெற்றுக் கொண்டார். மாவீரனும் , சிறந்த
நீதிமானுமான ஷெர்ஷாவின்
5 ஆண்டு கால ஆட்சியில்
தான் டெல்லி மக்கள் மகிழ்ச்சியாகவும் , அமைதியாகவும் வாழ்ந்தார்கள்
எனவும் ,
இரவில் கூட பெண்கள் தனியாக நடமாடும் அளவிற்கு டெல்லி
பாதுகாப்பாக இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
மிகவும் வித்தியாசமான மன்னர்தான் இவர்;ஷெர்ஷாவை "ஷேர்" ஷாவாக்கி விடுகிறேன்!-------BSNL வைத்தியநாதன், மதுரை-14
ReplyDelete